மீண்டும் உயர்ந்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  புத்தாண்டு 2025 தொடக்கம் முதலே தங்கம் தினமும் புதுப்புது உச்சங்களை தொட்டு வருகிறது.  ஒரு நாள் இறங்குவதும் அடுத்த நாளே 3 மடங்காக ஏறுவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

தங்கம்

இந்நிலையில்  சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் நேற்று மார்ச் 11ம் தேதி  செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன்  ரூ. 64,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மார்ச் 12ம் தேதி புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ40 அதிகரித்துள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,065-க்கும், சவரனுக்கு 320 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ64480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில்   வெள்ளிவிலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 109க்கும், பார் வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web