புதிய உச்சம் தொட்ட தங்கம்... கிராம் ரூ9000ஐ கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.
இதனால் நகைப்பிரியர்கள் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 9015க்கும், சவரனுக்கு ரூ560 உயர்ந்து ஒருசவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ .72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மூன்று நாள்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!