தங்கம் வாங்க சரியான நேரம்... வாரத்தின் இறுதி நாளில் நகைப்பிரியர்கள் உற்சாகம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அட்சய திருதியை முடிவடைந்த நிலையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அந்த வகையில் நேற்றைய விலை நிலவரப்படியே இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ8755க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 70,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ108000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!