ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மே 6ம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி காலையில், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (மே 6) தங்கம் விலை மாலை நேரத்தில் கிராம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.2600 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மே 7ம் தேதி புதன் கிழமை தங்கம் விலை ஏறிய வேகத்தில் சர்ரென இறங்கியுள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,075க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!