மாதத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கம் விலை ... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் தங்கம் விலை வரலாறு காணாத விலையை தொட்டு நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் ஆனால் மாதக் கடைசியில் கடந்த 8 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்ததில் ஆறுதல் கிடைத்தது.
அந்த வகையில் ஜூன் மாத கடைசி நாளான நேற்று ஜூன் 30ம் தேதி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று (01.07.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,020க்கும், சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!