மீண்டும் உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கத்தின் விலை நவம்பர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. செப்டம்பர் 24ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்தது. அதன் தொடர்ச்சியாக விலை உயர்ந்து, அக்டோபரில் ரூ.57000ஐ தாண்டி புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று குறைய ஆரம்பித்தது.
நவம்பர் 5ம் தேதி குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று அதிரடியாக தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்தது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 85 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7285க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.58280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ103000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!