வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி... மீண்டும் உயர்ந்த தங்கம்!

 
தங்கம்


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் மிகப்பெரிய முதலீடாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான் தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ 10000 அளவிற்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு  பல்வேறு நாடுகளுக்கு மீதான வரி விதிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.  

தங்கம்

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை மாறி, தங்கத்தில் முதலீடு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து  நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரியில் புதிய உச்சம் தொட்டது.அந்த வகையில் தங்கத்தின்  விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.63,000ஐ தாண்டி ரூ64000ஐ  தொட்டது. இதனால் நடுத்தர வர்க்க நகைப்பிரியர்கள் என்ன செய்வது என குழம்பிய நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் 2 முறை  தங்கத்தின் விலை குறைந்தது.
தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்து வருகிறது.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அந்த வகையில்  பிப்ரவரி 15ம் தேதி சனிக்கிழமை சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கு  விற்பனை செய்யப்பட்டது.  இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.100 குறைந்து  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,890க்கு  விற்பனை செய்யப்பட்டது.  வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ50 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 7940க்கும், சவரனுக்கு ரூ 400 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 63520க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web