இல்லத்தரசிகளுக்கு ஷாக்... ஒரே ஒரு கிராம் தங்கம் ரூ8035/- !!

புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக சூழல் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தில் முதலீடு என்பது ஒருவகை சேமிப்பாகவே இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்களின் மதிப்பை காட்டும் வகையில் தங்க நகைகளை அணிவார்கள். மேலும் தங்களின் பெண் குழந்தைகளின் திருமணம் போன்ற எதிர்கால சேமிப்பிற்காகவும் தங்கத்தை வாங்குகிறார்கள்.
2025ல் ஜனவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் சர்வதேச அளவில் வர்த்தக சூழல் போன்றவை தங்கம் விலையை நிர்ணையிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலையானது இனிவரும் நாட்களில் ஒரு சவரன் 80ஆயிரம் ரூபாயை எளிதாக எட்டிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ65 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8035க்கும் சவரனுக்கு ரூ 520 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ64240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!