மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு முதலே தங்கத்தின் விலை புதுப்புது உச்சம் தொட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 22ம் தேதி முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 60000ஐ கடந்தது.
தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்த நிலையில் திடீரென சரிந்தாலும் சவரன் ரூ. 63000க்கு குறையாமல் இருந்தது.
பிப்ரவரி 12ம் தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ. 64,480க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, ரூ. 64000ஐ கடக்காமல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. புதன்கிழமை காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 63,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 8,035-க்கும் சவரனுக்கு ரூ240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 64,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 109க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!