வார இறுதியில் ஷாக்... மீண்டும் உயர்ந்த தங்கம்... !

 
தங்கம்

 தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில்  நிர்ணயிக்கப்படு வருகிறது. குறிப்பாக   சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி   சவரன் ரூ.59000ஐ கடந்து  புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம்


ஜனவரி 21ம் தேதி தங்கம் விலை 60000ஐ கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில நாட்களாக  தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக  பிப்ரவரி 1ம் தேதி தங்கத்தின் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை   சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64200-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

தங்கம்

வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ20 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8045க்கும் , சவரனுக்கு ரூ160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ64360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை சற்றே குறைந்துள்ளது . இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ108க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ108000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web