வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... தங்கம் வரலாறு காணாத அளவு விலை உயர்வு!

தமிழகத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ185 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,745க்கும் சவரனுக்கு ரூ1480 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.69,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சவரனுக்கு ரூ 1480 வரையில் அதிகரித்துள்ளது. அதன் பிறகு ஒரு கிராம் ரூ8,745க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ108க்கும், ஒரு கிலோ வெள்ளி 108000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!