தாறுமாறாக சரிந்த தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்
 


தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ2200 உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, பவுன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

 'அட்சய திருதியை' தினமான நேற்று சென்னையில் உள்ள தங்க நகைக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறக்கப்பட்டிருந்தன.  நேற்றை நிலவரப்படி  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ8980க்கும், சவரனுக்கு  ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

தங்கம்

இந்நிலையில் அட்சய திருதியைக்கு அடுத்த நாளான இன்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில்  தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ205 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8775க்கும்,  சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தி வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ109000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web