தொடர் சரிவில் தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அட்சய திருதியை நாளில் இந்தியாவில் 12000கோடிக்கு மேல் தங்கம் விற்பனை ஆகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் எனக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (30.04.2025) அட்சய திருதியை அன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மே 1ம் தேதி கிராமுக்கு அதிரடியாக ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775க்கும் சவரனுக்கு ரூ.1640 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று மே 2ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!