வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!

 
தங்கம்
 


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாறிவரும்  பொருளாதார நிலைக்கு ஏற்பவும்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உட்பட  பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.   

தங்கம்
ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது. நேற்றைய நிலவரப்படி  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ80 உயர்ந்து ஒரு கிராம் ரூ9100க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.  

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

அதன்படி இன்று கிராமுக்கு ரூ195 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9295க்கும்,  சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.120000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது