வாரத்தின் முதல் நாளில் சற்றே சரிந்த தங்கம்.... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

 
தங்கம்

 தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. ஜூன் 11ம் தேதி அதிகரிக்க தொடங்கிய தங்கம் 13ம் தேதி வரலாறு காணாத உச்சம் தொட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

அடுத்தடுத்த நாட்கள் மேலும் உயர்ந்த தங்கம் நேற்று முன் தினம் சனிக்கிழமை ஒரு கிராம் ரூ9235க்கும், ஒரு சவரன் ரூ73880க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை சற்றே சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9230க்கும், சவரனுக்கு ரூ40 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ73840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ120க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ120000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது