ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை!

 
gold actress
 

சென்னையில் தங்க விலை இன்று சாதனை வகையில் ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்றோ ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, நகை வியாபாரிகளையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500 ஆக இருந்த விலை, மாலையில் மேலும் ரூ.100 ஏறி ரூ.11,600-ஐ தொட்டுள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சவரன் தங்கத்தின் விலையும் அதேபோல் திடீர் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. காலை ரூ.800 உயர்ந்து ரூ.92,000-ஐ எட்டிய விலை, மாலையில் மேலும் ரூ.800 உயர்ந்து ரூ.90,800 என மாற்றம் கண்டுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ள நிலை, திருமண பருவத்தை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்றே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

வெள்ளி விலையும்  உயர்வை பதிவு செய்திருக்கிறது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.176 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,000 உயர்ந்து ரூ.1.76 லட்சமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்–வெள்ளி விலையில் தொடர்ச்சியான மாற்றங்களால் சந்தை சூழல் பேச்சு பொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!