தாறுமாறாக சரிந்த தங்கம் விலை... வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி!
தங்க விலை கடந்த சில தினங்களாக உயர்வு–சரிவு என மாறி மாறி பதிவாகி வருகிறது. 14-ந்தேதிக்குப் பிறகு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்திருந்த விலை, நேற்று குறைவு கண்டது. அப்போது ஒரு கிராம் ரூ.11,600, சவரன் ரூ.92,800 என இருந்த தங்கம், நேற்று கிராமுக்கு ரூ.100, சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500, சவரன் ரூ.92,000 என விற்பனையாகியது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து விலை சரிந்தது.

இந்த நிலையில் இன்று தங்க விலையில் மேலும் சரிவு பதிவாகியுள்ளது. கிராமுக்கு ரூ.40, சவரனுக்கு ரூ.320 குறைவுடன், ஒரு கிராம் தங்கம் ரூ.11,460க்கும், ஒரு சவரன் ரூ.91,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கம் கடந்த இரண்டு நாளில் தொடர்ச்சியாக விலை இழந்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று மீண்டும் சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.169க்கும், கிலோ ரூ.1,69,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்–வெள்ளி விலையின் தொடர்ச்சியான இந்த மாற்றம் நகை வாங்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
