தாறுமாறாக சரிந்த தங்கம்… ஒரு நாளில் சவரனுக்கு ரூ.880 குறைவு !
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஓரே ஏற்ற–இறக்கமாகவே பயணிக்கிறது. முதலீட்டாளர்கள் ஒருமுறை தங்கத்தை நோக்கியும், பின்னர் பங்கு சந்தையை நோக்கியும் திரும்பத் திரும்ப கவனம் மாற்றுவதால், விலை நிலைமை கலங்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த அக்டோபரில் சவரன் ரூ.97,600 என்ற உச்சத்திலிருந்து ரூ.88,600 வரை வீழ்ந்த நிலையில், இந்த மாதமும் அதே சறுக்கல், ஏற்ற மாறுபாடுகள் தொடர்ந்தன. குறிப்பாக 13-ந்தேதி விலை ரூ.95 ஆயிரத்தைத் தாண்டி பின் திடீரென குறைந்தது.

நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்த நிலையில், இன்று காலை சந்தை முற்றிலுமே வேறு முகத்தில் தோன்றியது. திடீர் சரிவால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.110 வீழ்ச்சி ஏற்பட்டு, ரூ.11,520-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் தளர்ந்து, கிராமுக்கு ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்–வெள்ளி விலைகளில் திடீர் சரிவால் நகை வியாபாரிகளும், வாங்குபவர்களும் ஆச்சரியத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
