மீண்டும் உயர்ந்த தங்கம்... நகை வியாபாரிகள் உற்சாகம்!
சென்னையில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக மாறி மாறி வருவதால் நகை வாங்குபவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அக்டோபரில் ரூ.97,600 என்ற உச்சத்தைத் தொட்ட தங்கம், பின்னர் ரூ.88,600 வரை சரிந்தது. நவம்பரில் கூட விலை ஒருநாள் உயர்ந்து மறுநாள் குறையும் நிலை தொடர்ந்ததால் சந்தை நிலைப்பாடு பாதிக்கப்பட்டது.

நேற்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160-க்கு விற்ற தங்கம் இன்று திடீரென மீண்டும் ஏற்றத்தைப் பார்த்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,660 உயர்ந்து ரூ.93,760 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,720 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.174, கிலோக்கு ரூ.1,71,000 என விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அலைபாய்வதால் வரவிருக்கும் திருமண சீசனில் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் எப்போது வாங்குவது என குழப்பத்தில் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
