வெள்ளிக்கிழமையில் ஷாக் கொடுத்த தங்கம்... சவரன் ரூ95000 நெருங்கியது!

 
தங்கம்

  

தங்க சந்தையில் ஏற்றத்தாழ்வு தொடர்கிறது. கடந்த மாதம் அக்டோபர் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600-ஐ தொட்ட தங்கம், அடுத்த சில தினங்களில் சரிந்து 28-ந்தேதி ரூ.88,600-க்கு வீழ்ந்தது. அதன் பின் தொடர்ந்து உயரும், குறையும் நிலை நீடித்து வந்த நிலையில், இந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்து ரூ.95 ஆயிரத்தை கடந்தது. ஆனால் அதுவும் நிலைக்காமல் மீண்டும் விலை சரிந்து சவரனுக்கு ரூ.94,160 ஆகவும், கிராமுக்கு ரூ.11,770 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இதேசமயம் வெள்ளி விலையும் அலைபாயும் போக்கை காட்டி வருகிறது. கடந்த நாட்களில் கிராமுக்கு ரூ.4 மற்றும் கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.180, ஒரு கிலோ ரூ.1.80 லட்சம் ஆகிய விலையில் விற்பனையானது. முதலீட்டாளர்கள் பங்கு சந்தை, தங்கத்தில் மாறி மாறி மனம் திருப்புவதால் இந்த அதிர்வு தொடர்வதாக வியாபாரிகள் கூறினர்.

இந்நிலையில் இன்று தங்கம் மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,840-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சிறு உயர்வை சந்தித்துள்ளது; கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.183-க்கும், கிலோ ரூ.1.80 லட்சமாகவே நிலைத்து உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!