ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை... நகை வியாபாரிகள் உற்சாகம்!
கடந்த அக்டோபர் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் 28-ந்தேதி ரூ.88,600 ஆக சரிந்தது. இதற்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாகவே நகர்ந்து வருகிறது. ஒருநாள் தங்கத்தின் பக்கம், மறுநாள் பங்குச் சந்தையின் பக்கம் என முதலீட்டாளர்களின் கவனம் மாறி மாறி செல்லும் நிலை இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கும், ஒரு சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு மீண்டும் சந்தையில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.96,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
