வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Dec 11, 2025, 10:14 IST
தங்கமும், வெள்ளியும் போட்டிப் போட்டுக் கொண்டே மீண்டும் ஏற்றத்தைத் தொடங்கியுள்ளன. நவம்பரில் விலை சரிவு கண்ட நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கி இரண்டும் வேகத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இம்முறை தங்கத்தை விட வெள்ளிதான் தாறுமாறாக உயர்ந்து சந்தையை ஆளுகிறது. நேற்று ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.8, கிலோவுக்கு ரூ.8,000 என்ற அளவுக்கு ஏறி, கிராம் ரூ.207, கிலோ ரூ.2.07 லட்சத்தை தொட்டது. அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பின் இது மிக உயர்ந்த விலையாகும்.
தங்கமும் பின்தங்கவில்லை. நேற்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030 ஆகவும், சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.96,240 ஆகவும் விற்பனையானது. இன்று மீண்டும் உயர்வு தொடர, கிராமுக்கு ரூ.20, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து தங்கம் கிராம் ரூ.12,050, சவரன் ரூ.96,400 ஆகியுள்ளது.
வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.2, கிலோவுக்கு ரூ.2,000 உயர்வுடன் வெள்ளி தற்போது கிராம் ரூ.209, கிலோ ரூ.2.09 லட்சம் என்ற புதிய உயரத்தைப் பதிவு செய்துள்ளது. விலை ஏற்றத்தால் நகை வியாபாரிகள் சந்தையில் பரபரப்பும், முதலீட்டாளர்களிடையே கூடுதல் கவனமும் நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
