ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வெள்ளி!
சென்னை தங்கம் மார்க்கெட்டில் இன்று (டிச. 12) பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,560 உயர்ந்துள்ளது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும்.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. அப்போது சவரன் தங்கம் ரூ. 1,600 உயர்ந்து ரூ. 98,000-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 200 உயர்ந்து ரூ. 12,250-க்கு விற்பனை ஆனது. இந்த விலை உயர்வு முதலிலேயே உச்சத்தை தொட்டது.

ஆனால், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் நேரத்தில் மேலும் உயர்வு ஏற்பட்டது. இரண்டாவது முறையாக சவரனுக்கு ரூ. 960 உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ. 98,960-க்கும் விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ. 12,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று இரண்டாவது முறையாக கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 216-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,000 உயர்ந்து ரூ. 2.16 லட்சத்துக்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
