தங்கம் விலை வரலாற்று உச்சம்! சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கியது!
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை இன்று எட்டியுள்ளது. சென்னையில் இன்று (டிச. 15) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிரடியாக அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி, விரைவில் இந்த மைல்கல்லை எட்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.90 அதிகரித்து ரூ.12,460-க்கு விற்பனையாகிறது.

இந்த அதிரடி விலை உயர்வுக்கு அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, சேமிப்புகள் மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு குறைந்து, முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை லாபம் தரும் தங்கத்தின் பக்கம் திருப்புவார்கள். இதனால், தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ரூ.97,600-க்கு விற்ற தங்கம், நவம்பர் 5-ஆம் தேதி ரூ.89,440 ஆகக் குறைந்திருந்தது.

ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கிடுகிடுவென விலை உயரத் தொடங்கியது. கடந்த 12-ஆம் தேதி சவரன் ரூ.98,960-க்கு விற்று புதிய உச்சத்தை தொட்டது. தற்போது, தொடர்ந்து இரண்டு நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
