சர்ரென சரிந்த தங்கம்... சவரனுக்கு ரூ.1,320 குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. தொடர்ந்து ஏற்றத் தாழ்வுடன் இருந்து வந்த தங்கம் விலை தற்போது ரூ.96,000-ஐ கடந்த நிலையிலிருந்து கீழிறங்கியுள்ளது. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680-க்கும் விற்பனையானது. பிற்பகலில் மேலும் உயர்ந்து கிராமுக்கு ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 12 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,920 உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு சவரன் ரூ.98,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.211-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.2.11 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
