தங்கம் விலை மீண்டும் உயர்வு… சவரன் ரூ.99,200-க்கு விற்பனை
கடந்த 12-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. 15-ந் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120 என்ற உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என தங்கம் விலை மாற்றமடைந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று கிராமுக்கு ரூ.60, சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.12,380-க்கும், ஒரு சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது. இந்த சரிவால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து புதிய உச்சத்தை தொடுகிறது. இன்று கிராமுக்கு ரூ.5, கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.226-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
