எகிறி அடிக்கும் தங்கம், வெள்ளி விலைகள்... !
இந்திய குடும்பங்களின் பாரம்பரிய சொத்து தங்கம், இப்போது பலருக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆண்டு தொடக்கத்தில் கணிக்கப்பட்டதுபோல, ஆண்டு இறுதிக்குள் அந்த இலக்கை தங்கம் எட்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,770 ஆகவும், பவுனுக்கு ரூ.1,02,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 வரை உயர்வு பதிவானது. சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.1,02,400-க்கு விற்பனையாகி, சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தங்கம் போலவே வெள்ளி விலையும் தடையில்லாமல் உயர்கிறது. கிராம் ரூ.244, கிலோ ரூ.2.44 லட்சம் என புதிய சாதனை படைத்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றம், டாலர் மதிப்பு, மத்திய வங்கிகளின் முதலீடு ஆகியவை விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளன. இதனால் நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு தங்கம் கனவாகவே மாறி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
