புதிய உச்சம் தொட்ட தங்கம் வெள்ளி?... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்
 

 

தங்கமும் வெள்ளியும் யார் பெரிய ஆள் என்பதுபோல் விலையில் போட்டி போட்டுக் கொண்டு பாய்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் ‘டாப் கியர்’ போட்டு முன்னேறி வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் சரிவு இல்லாமல் தொடர்ந்து ஏற்றமே கண்டு வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,360 உயர்ந்துள்ளதால், வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம்

தங்கத்தை விட அதிவேகத்தில் வெள்ளியும் உச்சத்தை நோக்கி பாய்கிறது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது. சோலார் தகடுகள், எலக்ட்ரிக் கார்கள், 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமிகண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிப்பதும், தேவை–விநியோக இடைவெளியும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!