வெள்ளி விலை புதிய உச்சம்… வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி!
தங்கம், வெள்ளி விலைகள் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வருகின்றன. தங்கம் உயர்வும் சரிவும் மாறி மாறி காணப்படும் நிலையில், வெள்ளி மட்டும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820 ஆகவும், பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 560 ஆகவும் விற்பனையானது.

இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.12,890 ஆகவும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.254 ஆகவும், கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரமாகவும் விற்கப்படுகிறது. தங்கத்தை விட வெள்ளி விலை வேகமாக உயர்ந்து வருவது நகைப் பிரியர்களையும் இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
