தங்கம்–வெள்ளி விலையில் திடீர் சரிவு… நகைப் பிரியர்கள் உற்சாகம்!
2025 தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வந்தது. சமீப நாட்களாக தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடுமையான ஏற்றத்தை சந்தித்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கும் விற்பனையானது.
அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,81,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று தொடர்ந்து 2-வது நாளாக தங்கம், வெள்ளி விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ரூ.2,58,000-க்கும் விற்பனையாகி வருகிறது. போட்டிப்போட்டு உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த சரிவு நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
