மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம்... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.99,520-க்கு விற்பனையான நிலையில், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் தங்கம் விலை ஒரு லட்ச ரூபாய் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை தாண்டி விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.140 அதிகரித்து ரூ.12,580-க்கு விற்கப்படுகிறது. விலை ஏறுவதும் இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று போட்டி போட்டுக்கொண்டு எகிறியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. புத்தாண்டு கொண்டாட்ட உற்சாகத்தில் இருந்த மக்களுக்கு தங்கத்தின் இந்த விலை உயர்வு பெரும் இடியாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
