ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் ... வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. நிகழாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்றமும் இறக்கமும் காட்டி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.12,680-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் மீண்டும் உயர்வு ஏற்பட்டது. இதனால் ஒரு கிராம் ரூ.12,760-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் உயர்வைக் கண்டது. இன்று காலை கிராம் ரூ.265-க்கும், கிலோ ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது. மாலையில் கிராம் ரூ.266-க்கும், கிலோ ரூ.2.66 லட்சத்துக்கும் உயர்ந்தது. ஒரே நாளில் தங்கமும் வெள்ளியும் மக்களை கலங்க வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
