தங்கம் அதிரடி சரிவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்
 

 

2025-ம் ஆண்டில் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ந்து உயர்ந்து சாதனை படைத்தது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 52 முறை புதிய உச்சத்தை எட்டிய தங்கம், சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியது. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தாலும், நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தங்கம்

2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை திடீரென சரிந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், சவரன் ரூ.99,520க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மறுநாளே விலை மீண்டும் உயர்ந்து, சவரன் ரூ.1,00,640க்கும், கிராம் ரூ.12,580க்கும் சென்றது. நேற்று காலை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,02,960க்கு விற்ற நிலையில், மாலையில் விலை குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் வெள்ளி

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கும், கிராம் ரூ.50 குறைந்து ரூ.12,750க்கும் விற்பனை ஆகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000க்கும், ஒரு கிராம் ரூ.272க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!