தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதம்.. தவிக்கும் மக்கள் !!

 
வெயில்

சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.

வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிகபட்சமாக இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக கரூர், பரமத்தியில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

அடுத்ததாக சேலம் 101.84, ஈரோடு.101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வேலூர் 100.76, நாமக்கல் 100.4, மதுரை நகரம் 100.04, மதுரை விமான நிலையம் 100.04, திருப்பத்தூர் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகி உள்ளது உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில்

இதனிடையே, கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web