இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கன்னியாகுமரியில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தக்கலை செய்கு பீர்முஹம்மது  ஹாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை இன்று நடைப்பெறுவதையடுத்து இந்த உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தக்கலை செய்கு பீர்முஹம்மது  ஹாகிபு ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆண்டு விழா இன்று பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.  ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வசதியாகவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Kanniyakumari

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (பிப். 6) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Local-holiday

06.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர் முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881(Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 06.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web