கொண்டாடுங்க மாணவர்களே!! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், மழை  காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதுண்டு.  அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 11ம் தேதி  சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலார் அறிவித்திருந்தார்.  தற்போது காஞ்சிபுரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   தமிழகம் முழுவதும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி  திங்கட்கிழமை தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும்  பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி  திங்கட்கிழமை  முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 14ம் தேதி  முதல்  ஏப்ரல் 5ம் தேதி வரையும்  நடைபெற  உள்ளது.

 

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதனை  அரசு தேர்வுத்துறை இயக்ககம்  வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வினை  8,51,303 பேரும்,  பிளஸ் 1 தேர்வுகளை 7,88,064 பேரும் எழுத உள்ளனர். தேர்வுகள் நடைபெறும் முறையை கண்காணிக்க 3,100 பறக்கும் படைகள்  தயார் நிலையில் உள்ளன.

விடுமுறை

இதனையடுத்து தேர்வு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web