இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு  ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி  மாவட்டம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு களைக்கட்டி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. 

Kanniyakumari

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி கொடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மார்ச் 14ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Local-holiday

14.03.2023 இன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.05.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறை அளிக்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web