இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறை... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகவும், விழாவின் முக்கியத்துவத்தைக் கருதியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இன்று, டிசம்பர் 30 விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று திருச்சி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை என்றாலும், அரசுத் துறையின் அனைத்துத் துணைக் கருவூலங்களும், மாவட்டக் கருவூலமும் அவசரப் பணிகளுக்காகக் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 20ம் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இதில் நேற்று 'பகல்பத்து' உற்சவம் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 'இராப்பத்து' திருவிழா தொடங்குகிறது.

சொர்க்கவாசல் திறப்பைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
