இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் எகிறும் எதிர்பார்ப்பு!
19 வயதுக்குட்பட்டோருக்கான (Under-19) 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லீக் ஆட்டத்தில் இன்று (டிசம்பர் 14) பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜூனியர் ஆசிய கோப்பைத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
‘ஏ’ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம்.
‘பி’ பிரிவு: இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இந்தப் போட்டியின் முக்கிய லீக் ஆட்டத்தில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஆயூஷ் மாத்ரே தலைமையிலான பலம் வாய்ந்த இந்திய அணி, பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த இளம் வீரர்களின் போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
