இன்று இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்.. மிஸ் பண்ணீடாதீங்க.!

 
சூரியன்

2023 முடிய இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. இந்நிலையில் இன்று  இயற்கை அதிசயத்தை அனுபவிக்கும் படி ஒரு நிகழ்வு. இன்று டிசம்பர் 22ம் தேதி இந்தியாவின் மிக நீண்ட இரவு காலம்.  பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில் படாதபோது இந்த  இயற்கை அதிசயம் ஏற்படுகிறது.   அதாவது இன்றைய தினம் தான் நாம் மிக நீண்ட இரவையும் மிகக் குறுகிய பகலையும் அனுபவிக்க உள்ளோம்.   பூமியும் சூரியக் குடும்பமும் பலப்பல  ஆச்சரியங்களை நமக்கு தந்து கொண்டே இருக்கிறது.  மனிதர்களின்  பரிமாண வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக இவை தான் இருக்கின்றன.  

சூரியன்

 

இன்று காலை மிகச் சீக்கிரமாகவே விடிந்து விட்டது. அதே போல் இன்று மாலையும்  சூரியன் மிகச் சீக்கிரமே ரெஸ்ட் எடுக்கச் சென்றுவிடுவான்.  தற்போதைய காலநிலைப்படி இந்தியா முழுக்க குளிர் காலம் நிலவி வருகிறது . இதன்படி இன்று நமக்கு  மிக நீண்ட இரவாக அமையப் போகிறது.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22ம் தேதி தான் நமது நாட்டில் மிக நீண்ட இரவு நாள்.  அதன்படி இன்றைய தினம் மிக நீண்ட இரவு நமக்குக் காத்திருக்கிறது. இதை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் Winter Solstice எனக் கூறுகின்றனர்.  அதாவது  வடக்கு அரைக்கோளம் அதாவது Northern Hemisphere சூரியனில் இருந்து   சற்று அதிகம் சாய்ந்திருக்கும்.

 

சூரிய நமஸ்காரம்

இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் பகல் நேரம் குறுகியதாகவும் இரவு நேரம் நீண்டதாகவும் இருக்கும்.   பூமி தினம் சூரியனைச் சுற்றி வரும் நிலையில், அது அச்சில் 23.4 டிகிரி சாய்ந்துள்ளது.  அதேநேரம் அது சூரியனில் இருந்து விலகி இருந்தால் பகல் அதிகமாக இருக்கும்.  அனைத்து நாட்களுக்கும் 24 மணி நேரம் தான் என்ற போதிலும் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தின் அடிப்படையில் இந்த நீண்ட இரவு நேரம் கணக்கிடப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவதைப் பார்ப்பது அதிசயமான ஒரு நிகழ்வாக இருக்கும்.  குறிப்பாக இன்று சூரியன் மறையும் போது ரொம்பவே அழகாக இருக்கும். 

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web