இன்று திருவாதிரை களி ரொம்ப விசேஷம்... எப்படி செய்வது?! - எளிமையான செய்முறை!!
இன்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவாதிரைக்களி செய்து, நடராஜருக்கு படைப்பது ரொம்பவே விசேஷம். இன்றைய தினம் ஆருத்ரா தரிசனத்தன்று பெளர்ணமியும் சேர்ந்து வருவது ரொம்பவே விசேஷமானது. இன்றைய வழிபாடு நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக ராகு, கேது தோஷம் இருப்பவர்கள் இன்று வழிபாடு செய்வது அவசியம்.

மார்கழி பௌர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே ஆருத்ரா தரிசனம். இந்நாளில் ஆலயம் சென்று நடராஜரை தரிசிப்பதுடன் வீடுகளில் திருவாதிரைக் களியும், 7 கறி கூட்டுக்குழம்பும் சேர்த்து படையல் இடுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருவாதிரைக் களியை மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம். மறக்காமல் திருவாதிரைக் களி செய்து படைத்து நடராஜரின் அருளைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 250கி
வெல்லம் - 300கி
பாசிப்பருப்பு - 50கி
ஏலக்காய் - 3
முந்திரி - 10
தேங்காய் - 1/2மூடி
நெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றீ, அதில் அரிசி, பருப்புகளை தனித்தனியே வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். சிறிது ஆறிய பின் மிக்சியில் ரவை பதத்தில் உடைத்து வைக்கவும்.
வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதி வந்ததும் அத்துடன் உடைத்த அரிசி, பருப்பு ரவையைச் சேர்த்து கிளற வேண்டும்.முக்கால் பதம் வெந்த உடன் நெய், தேங்காய்த்துருவல் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்த உடன் முந்திரியை நெய்யில் வறுத்து ஏலப்பொடி தூவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான திருவாதிரை களி தயார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
