இன்று சதுர்கிரகி யோகம்: இதை தானம் செய்தால் கிரக தோஷங்கள் நீங்கும்!
இன்று சதுர்கிரகி யோகம். இன்று தனுசு ராசியில் 4 கிரகங்கள் இணைவதால், சதுர்கிரகி யோகப் பரிகாரமாக நவதானியங்களை தானம் செய்வது அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை வழங்குவது கிரக தோஷங்களைக் குறைக்கும்.
இன்று மார்கழி மாத தேய்பிறை சஷ்டி திதி. சஷ்டி என்றாலே அது முருகப்பெருமானுக்கு உகந்த நாள். "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இன்று முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாத வெள்ளிக்கிழமை என்பது அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானது. இன்று மகாலட்சுமி மற்றும் துர்க்கை அம்மனை வழிபடுவது செல்வச் செழிப்பைத் தரும்.
இன்று மாலை வரை உத்திரம் நட்சத்திரம் நிலவுகிறது. உத்திரம் நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. சூரிய பகவான் தனுசு ராசியில் இருக்கும் இந்த வேளையில் உத்திரம் நட்சத்திரம் வருவது, அரசாங்க காரியங்களில் வெற்றி மற்றும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.

இன்று மாலை முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி, "சண்முகக் கவசம்" அல்லது "கந்தர் சஷ்டி கவசம்" வாசிப்பது எதிரிகள் தொல்லையை நீக்கும்.
அதே போன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மாலை வீட்டில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
