இன்று கார்த்திகை பெளர்ணமி... கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்... கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

 
கிரிவலம்

இன்று கார்த்திகை மாத பெளர்ணமி தினம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை  முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் இந்த நேரம், ஆண்டுதோறும் மிகப் பெரும் ஆன்மிகச் சுழலாக அமைந்திருக்கிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தீபம்

2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலையை சுற்றி வலம் வரும் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை, பௌர்ணமி தினங்களில் செல்லும் போது மிக உயர்ந்த புண்ணியத்தை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது. பெளர்ணமி நிலவின் ஒளி மலையில் பட்டு, கிரிவலம் செல்லும் பக்தர்களின் மீது படுவதால் தேகம் ஆரோக்கியமடைந்து, ஆன்ம பலமும் பெருகுவதாக நம்பிக்கை. இதற்காக தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு திரண்டுவந்துள்ளனர். கார்த்திகை மாத மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு இந்த மாத பௌர்ணமி கிரிவலத்திற்கான நேரத்தைப் பற்றி பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை

அதன்படி, பௌர்ணமி திதி இன்று டிசம்பர் 4  தேதி (வியாழக்கிழமை) காலை 7.55 மணிக்கு தொடங்கி நாளை டிசம்பர் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3.55 மணிக்கு முடிவடைகிறது. இந்த திதி நேரமெங்கும் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல பௌர்ணமி தொடங்குவதற்கு முந்திய இரவிலேயே பக்தர்கள் கிரிவலம் தொடங்கினாலும், திதி முழுவதும் நிலவும் இந்த நேரமே உகந்ததாக கருதப்படுகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!