இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்: தமிழ் காக்க உயிரீந்த வீரர்களுக்கு வீரவணக்கம்!
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற முழக்கத்தோடு, இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் 'மொழிப்போர் தியாகிகள் தினம்' இன்று தமிழகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியைக் கட்டாய அலுவல் மொழியாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஜனவரி 25-ஆம் தேதி கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்துத் தனது உயிரைத் தமிழுக்காக அர்ப்பணித்தார். அவரைத் தொடர்ந்து கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி எனப் பல வீரர்கள் மொழிப் போரில் ஆவியைத் துறந்தனர்.
இந்தப் போராட்டமே தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டதுடன், 1967-இல் அறிஞர் அண்ணா தலைமையிலான ஆட்சி அமையவும் காரணமாக இருந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
