இன்று மார்கழி அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இதைச் செய்ய மறக்காதீங்க!

 
அமாவாசை பித்ரு தர்ப்பணம்

இன்று மார்கழி மாத அமாவாசை தினம். அமாவாசை தினத்தில் எந்த காரணம் கொண்டும் பித்ரு வழிபாட்டை மறக்காதீங்க.  தாய்-தந்தை வழியே தான் இந்த பூமிக்கு வந்திருக்கீங்க. அவங்க தான் முதல் கடவுள். அவங்க உயிருடன் இருக்கும் போதே அவங்க தாள் பணிந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அவங்க இறந்த பிறகும் அவர்களை நிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்வில் வெற்றியைப் பெறவே முடியாது.

எவன் ஒருவன் பித்ருக்களுக்கு தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறானோ அவனை மட்டுமல்லாமல், அவனது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும் வல்லமை பெற்றது பித்ரு வழிபாடு. அமாவாசை தினத்தில் எதை எல்லாம் செய்ய கூடாது? எதை செய்ய வேண்டும் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!

அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். அதற்கு முன்பாக வாசலில் கோலம் போடக் கூடாது. முன்னோர்கள் படங்களுக்கு பூக்கள் சாற்றுவதை விட அமாவாசை தினத்தில் துளசி சாற்றி வழிபட வேண்டும். 

அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம். அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு சாப்பிடலாம். இவற்றுடன் தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு. அதனால் அமாவாசை விரதம் இருப்பவர்கள் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க. பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web