இன்று மாசி மகம்... கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம்... இதை மறக்காம செய்யுங்க!

 
மாசி மகம்

இன்று மாசி மகம். மகம் நட்சத்திரம் ஜெகத்தை ஆளும் என்பார்கள். மாசி மாதத்தில் பெளர்ணமி திதியும், மகம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வருகிற நாளைத் தான் மாசி மகம் என்றழைக்கிறோம். இந்த வருடம் மாசி மகம் இன்று மார்ச் 12ம் தேதி அதிகாலை 3.53 மணி துவங்கி, நாளை காலை 5.09 மணி வரையில் மகம் நட்சத்திரம் இருக்கிறது.

மாசி மகமான இன்றைய தினத்தை 'கடலாடும் நாள்', 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் புனித தலங்களிலுள்ள நீர்நிலைகளில் சென்று நீராடினால் பல ஜென்மங்கள் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதிலும் கங்கை உட்பட அனைத்து புண்ணிய நதிகளுமே சங்கமிப்பதாக கருதப்படுகிற கும்பகோணம் சென்று புனித நீராடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மாசி கடலாட்டு விழா

ஆனால் அனைவராலும் கும்பகோணத்திற்கோ அல்லது புண்ணிய தீர்த்தங்களுக்கோ சென்று புனித நீராட முடியாது. ஆறு, குளம் போன்றவற்றில் நீராட வாய்ப்பு இல்லாதவர்கள், அங்கு செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே புனித நீராடிய பலனைப் பெற முடியும்.

வீட்டின் பூஜை அறையில் அல்லது வழிபடும் சாமி படத்திற்கு அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். பூஜைக்கு சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. செம்பு, பித்தளை பாத்திரங்கள் அல்லது மண்ணால் ஆன பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் சிறிது மஞ்சள் தூளை போட்டு, வாசனை பொடி சேர்க்கவேண்டும். கங்கை தீர்த்தம் இருந்தாலும் அதில் சேர்த்துக் கொள்ளலாம். அந்த தண்ணீருக்கு தீப, தூப ஆராதனை காட்டி, நவ நதிகளின் (புண்ணிய தீர்த்தங்கள்) பெயர்களை சொல்லி வேண்டுதலை வைக்க வேண்டும்.

மாசி மகம் தெப்பத்திருவிழா

"எங்கள் வீட்டில் உள்ள இந்த பாத்திரத்தில் உள்ள நீரில் எழுந்தருளி, நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கி புனித நீராடிய பலனை வழங்க வேண்டும்'' என வேண்டிக் கொண்டு அந்த தண்ணீரை சிறிது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். தீர்த்தமாக கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம். அதன்பின்னர் அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் குளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் நீர், பூஜையில் வைத்தபின் அது தீர்த்தத்திற்கு இணையான புனித தன்மையை பெற்று விடுவதால் இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெறலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web