இன்று பங்குனி உத்திரம்... எப்படி வழிபட்டால் முழு பலன்கள்?! என்னென்ன விசேஷம்?

 
பங்குனி உத்திரம்

இன்று பங்குனி உத்திரத் திருநாள். தமிழ்  மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் முழுவதுமே இறை வழிபாட்டுக்குரிய மாதம். அதிலும் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திரம் மிகவும் விசேஷமானது.  

பங்குனியில் தான் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரன் பார்வதி திருக்கல்யாணம், வள்ளி, ஐயப்பனின் அவதார தினம். அனைத்து சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக  கொண்டாடப்படும். பங்குனி உத்திர திருநாளில் தான் சிவபெருமான்  சுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார் என்பது ஐதிகம்.

பங்குனி உத்திரம்

இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும். முருக பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடு நடத்துவர்.

பங்குனி உத்திரம்
தமிழர் திருவிழாக்களை பொறுத்தமட்டில் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என பௌர்ணமியும், நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் தான் கொண்டாடப்படும். அந்த நாளில் விரதத்தை கொண்டாடுவது தான் சிறப்பு.  

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வத்தை வழிபடுவதும் மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும். இந்த உத்திர நாளில் குலதெய்வ வழிபாட்டோடு, வீட்டின் அருகில் இருந்தும் சிவன், முருகன் ஆலயங்களுக்கும் சென்று மனமுருகி உங்கள் பிரார்த்தனைகளை சொல்லுங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web