இன்று பங்குனி உத்திரம்... வருஷத்துல ஒரு நாள் மட்டுமே ஸ்ரீரங்கத்துல அரங்கேறும் விசேஷம்... வைரலாகும் வீடியோ!

திருவரங்கத்தில் பங்குனி உத்திர தினமான இந்த ஒரு நாளில் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும் விஷேசம் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வருடம் முழுவதும் ஏதாவது திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஆமாம் வருடத்தின் 365 நாட்களும் ஸ்ரீரங்கத்தில் விழாக்கோலம் தான்.
பெரிய பிராட்டியார் கருணையின் பிறப்பிடம். நம்மைப் போன்ற அடியார்களின் பிழைகளைப் போக்க புருஷாகாரம் செய்பவர். பங்குனி உத்திர தினமான இன்று பெருமாள் 8 வீதிகளில் எழுந்தருள்வார். தாயார் சன்னதியில் மட்டையடி உற்சவம் நடைபெறும். அதன் பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் பிரணய கலஹம் என்றழைக்கப்படுகிறது.
பெரிய பிராட்டியார் சேர்த்தி ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம், வருடத்தில் ஒரு முறை கொள்ளிடக் கரையில் சின்ன பெருமாள் தீர்த்தவாரி மற்றும் கத்யத்ரயம் சாற்று முறை நடைபெறும். பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம் நம்பெருமாள்.
பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு கட்டமாக ஆதி பிரம்மோத்ஸவம் தங்க குதிரை வாகனத்தில் எட்டாம் திருநாள் மாலை வீதியுல வருதலும் கோணவை யாழி சிறப்பு வீடியோவையும் கண்டு களியுங்கள். நாளைய ஏப்ரல் 12ம் தேதி பெருமாள் தேரில் எழுந்தருளல். இது கோரதம் என்றழைக்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!