இன்று பங்குனி உத்திரம்... சுபமுகூர்த்த தினம்... பூக்களின் விலை கடும் உயர்வு!

இன்று பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு நேற்று முதலே பல மாவட்டங்களிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்று பங்குனி உத்திரம் மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதைப் போலவே திண்டுக்கல் மாவட்டத்திலும், மதுரையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
இன்று இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட உள்ளது. கூடவே இன்று சுப முகூர்த்த தினமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் பூக்களின் விலை தமிழகம் முழுவதுமே கடுமையாக உயர்ந்து காணப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் நேற்று பிச்சிப்பூ கிலோ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது. மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கும், அரளி பூ ரூ.500க்கும் விற்பனை ஆகிறது. பூக்களின் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!