இன்று காணும் பொங்கல்.. 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில்.. ஏ.ஐ. டிரோன் கண்காணிப்பு.. மெரினாவில் குளிக்க தடை.. போக்குவரத்து மாற்றம்!

 
காணும் பொங்கல் மெரீனா

இன்று காணும் பொங்கலையொட்டி, குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல் ஆணையர் அருண் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 16,000 போலீசாருடன் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மெரினாவில் மட்டும் 13 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணிப்பார்கள். மெரினா மற்றும் பெசன்ட் நகரில் தலா 4 வீதம் மொத்தம் 8 ஏ.ஐ. (AI) திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் மணற்பரப்பைக் கண்காணிக்கும். இவை மூலம் எச்சரிக்கை தகவல்களும் ஒலிபரப்பப்படும்.

மெரினா

கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க, அவர்கள் கையில் பெற்றோரின் மொபைல் எண் எழுதப்பட்ட அடையாளப் பட்டை கட்டப்படும்.

கடல் சீற்றம் மற்றும் பாதுகாப்பு கருதி கடலில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முக்கியச் சாலை சந்திப்புகளில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படும்.

போக்குவரத்து தடை

இன்று காலை 11 மணி முதல் மெரினா காமராஜர் சாலையில் மாநகர பேருந்துகளைத் தவிர மற்ற வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்: சென்னை பல்கலைக்கழக வளாகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம், லேடி வெலிங்டன் பள்ளி & ராணி மேரி கல்லூரி, பொதுப்பணி துறை (PWD) மைதானம், மாநிலக் கல்லூரி வளாகம்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!